இந்தியாவின் துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே
துணை குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இதில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாஜகவினரின் இந்த கொண்டாட்டத்தால் கோவை கரூர் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.