• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு..,

Byஜெ.துரை

Mar 17, 2026

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில்,இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,
சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதனிடையே மதுரையில் நடைபெற்ற ‘அரசன் ‘ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிலம்பரசன் TR- ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடை அணிந்து நடித்திருக்கிறார்.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை தி. நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக குறிப்பிடத்தக்க வகையில் ‘ அரசன்’ உருவாகி வருகிறது.

இப்படத்தின் கதையை ‘பொல்லாதவன்’ படத்திற்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் எழுதி நிறைவு செய்திருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடை பெற்று இந்த ஆண்டின் இறுதியிலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.