தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஏபி4 வகையில் 7 பேரும், ஏபி 5 வகையில் 11 பேரும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேகமாக பரவக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.