கன்னியாகுமரியை அடுத்து உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஷேக் முகம்மது ஒலியுல்லாஹ் (ரலி) வருடாந்திர கந்தூரி விழா விமரிசையாக நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக, ஜனாப் கமால் கிராஅத் கொடி ஏற்றினார். பின்னர், சுன்னத் ஜமாத் சமூகநல கூடம் இமாம் மௌலானா மௌலவி முகம்மது தவ்ஃபீக் கவுஸரி மற்றும் தர்கா செயலர் அஸ்ரப் முன்னிலையில் மௌலூது ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனையை அல்தாஃபி மணலிகரை ஜுமுஆ மஸ்தித் துணை இமாம் எஸ். பிலாலுதீன் ஆலிம் ஃபாழிலி வழிநடத்தினார். மாலை நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி, கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லி அலி அக்பர், உறுப்பினர்கள் ஷேக் முஜிபுர் ரகுமான், முகம்மது செரீப், கச்சி முகம்மது ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆன்மிக விழாவில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சுல்தான், சாகுல், சாதிக், நாகூர் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.








