• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சைலேந்திர பாபு டிஜிபி (பணிஓய்வு) அவரது சொந்த இல்லத்தை பொது நூலகம் ஆக மாற்றினார்.

குமரி மாவட்டம் இயல்பாகவே எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற புகழுக்கு உரிய மாவட்டம். தொழிற்சாலையே இல்லாத குமரி மாவட்டத்தில், சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, ஆசிரியர் பணியில் ஆண்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

தமிழக அரசின் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் தாயார் ரெத்தினம்மாளே ஒரு முன்னாள் ஆசிரியயை. வாசிப்பை நேசிக்கும் அனைவரும் விரும்பியது வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற கருத்தை பொது வெளியில் விதைத்து வந்தனர்.

களியக்காவிளையில் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பிறந்து வளர்ந்த, படித்த பூர்வீக வீட்டை இரண்டு தினங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றினார். இந்த நூலகத்தில் பயிலும் மாணவர்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என்பதே அவரது கனவை சைலேந்திர பாபு தெரிவித்தவைகள்.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு குழித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டை நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றி அவரது தாயார் ரெத்தினம்மாள் செல்லப்பன் பெயரில் உருவாக்கியுள்ள பொது நூலகத்தை அவரது தாய் ரெத்தினம்மாள் ரிபன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றதையும்,நூலகத்தை பயன் படுத்தும் மாணவ,மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி உற்சாகப்படுத்தினேன்.

இந்த நிகழ்விற்கு வந்த என்னுடைய காவல்துறை , தீயணைப்புதுறை, கடலோர காவல் படை நண்பர்கள் உட்பட பல துறைகளில் இருந்து வந்து கலந்து கொண்டவர்கள் புத்தகங்களை பரிசுகளாக வழங்கினர் இங்கு டிஎன்பிசி, சிவில் சர்வீஸ் , நீட், வங்கி தேர்வு மத்திய மாநில அரசு சார்ந்த தேர்வுகள் சேர்ந்த பல பயிற்சிகளும் சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட்ட உள்ளன இது சம்பந்தமான புத்தகங்களும் பள்ளி கல்லூரி சேர்ந்த புத்தகங்களும் தினசரி செய்திதாள்களும் இந்த நூலகத்தில் உள்ளன காலை ஆறுமணி முதல் இரவு எட்டு மணி வரை நவீன வசதிகளுடன் இந்த நூலகம் செயல்பட உள்ளது.

வாசிப்பை நேசிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய சமுகத்திற்கு ஏற்படுத்த வேண்டும். என் அடி மனதின் ஆசையின் அடையாளமே இந்த நூலகம்.

வாசிக்கும் பழக்கத்தை அதிகபடுத்தினால் வேலைவாய்பிற்கு பயன்னுள்ளதாகும். வாசிப்பை நேசிக்க கற்று கொள்ள வேண்டும். வாசிப்பு மிகபெரிய சுகம் ஆர்வத்துடன் தேடி படிக்க வேண்டும். தற்போது உள்ள மாணவர்களிடம் விளையாட்டு சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல் கணிதம் மொழி உள்ளிட்டவை கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. அந்த ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் பயன்பெறும்.
நான் இந்த வீட்டில் இருந்து படித்து இந்த பதவிக்கு வந்தேன். அதே போன்று இந்த பகுதி இளைஞர்கள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் படிக்க வழிகாட்டியாக இருக்கும் இந்த நூலகம். எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியலை விரும்பி கற்க வேண்டும். புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நோபல்பரிசு பெற வாய்ப்பு உள்ளது. அப்படி இங்கு பயிலும் மாணவன், மாணவி நோபல் பரிசு பெற வேண்டும் என்பது என் ஆவல். மேலும் படைப்பாற்றல், சிந்தனை திறனை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவரது உள்ளத்தின் கனவை தெரிவித்தார்.