• Sun. Apr 28th, 2024

கீரிப்பறையில் மலைவாழ் மக்களுக்கு நிவாரணம். திரைப்பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார்

குமரி மாவட்டம் கீரிப்பறையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராம மக்கள் 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தினசரி கூலி வேலைக்கும், ரப்பர், தோட்டம், மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று கொண்டிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால், வேலை, போக்குவரத்து வசதி இல்லாததால் மிகவும் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டனர். மழை வெள்ளம் ஆறு போன்று ஓடியதால்; அவர்களால் அடிப்படை தேவையான பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் மழை நீர் தேங்கிய பகுதிக்கு சரிசெய்யும் பணிக்குச் சென்ற கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் அவர்கள் அந்த பகுதி மக்களையும் சந்தித்தார்.
அவர்கள் உணவுக்கு கஷ்டப்படுவதாக தெரிவித்தனர். இந்நிலையில், ஏழை மக்களின் பசியை போக்க அரிசி பைகள், நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்பகுதி மக்கள் அடிப்படை தேவையான குடிநீர் வசதியில்லாமல் இருப்பதால், அவர்களுக்கு விரைவில் குடிநீர் வசதியும், அங்குள்ள இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகாக உதவிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். கடந்த நான்கு நாட்களாக எந்த ஒரு பணிக்கு செல்ல முடியாமல் முடங்கியிருந்தனர்.
அவர்களுக்கு செய்த மனிதாபிமான உதவி மலைவாழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்வில், சமூக சேவகர்கள் பானுமதி வசந்தா, கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் விஸ்வை பாலகிருஷ்ணன் உடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *