• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஷாருக் மகன் கைது; டோவினோ தாமஸ் கருத்து!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளர். இந்த கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் ஷாருக் கானுக்கு ஆதரவாக பேசினர்.

இந்நிலையில் மலையாள நடிகரான டோவினோ தாமஸ் பாலிவுட் இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கேட்கப்பட்ட போது அரசியல் உள்நோக்கம் கொன்டது எனதான் தான் நினைப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் ‘ஷாருக் கானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் நோக்கம் என்றுதான் தோன்றுகிறது. நான் உறுதியாக சொல்லவில்லை. ஆனால் அப்படிதான் தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.