• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய்.,

ByKalamegam Viswanathan

Apr 28, 2025

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவு நீர் கால்வாய் கட்டியவர்கள் காங்கிரட் பூச்சுகள் மற்றும் கம்பிகளை அப்படியே கால்வாய் மீது போட்டுவிட்டு சென்றதால், பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட்டுகளை முழங்கால் அளவு உயர்த்தி கட்டியதால் தெருக்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் ஏற்படுவதாகவும் இதுகுறித்து பணிகள் நடக்கும் போது ஒப்பந்ததாரிடம் தெரிவித்த போது பொதுமக்களை மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசியதாகவும் ஆகையால் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய கழிவுநீர் கால்வாய் காங்கிரட் பூச்சுகளை பெயர்த்து எடுத்துவிட்டு மறுபடியும் கால்வாய் பணிகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர் கால்வாய் மீது போடப்பட்டுள்ள கட்டுக் கம்பிகளில் நடக்கும் போது கால்களில் குத்தி காயம் ஏற்படுவதாகவும் காங்கிரீட் போட்ட கம்பிகளை அப்படியே விட்டு சென்று விட்டதால் கம்பிகள் முழுவதும் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால் குழந்தைகள் நடக்கும் போது கம்பிகள் குத்தி காயம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்தத் தெரு வழியாகத்தான் வருகின்ற புரட்டாசி மாதம் தாராபட்டி கிராமத்தில் உள்ள மந்தை அம்மன் காளியம்மன் கோவில் திருவிழா பால்குடம் அக்னி சட்டி முளைப்பாரி ஊர்வலம் மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தெரு வழியாகத்தான் ஊர்வலமாக வருவார்கள்.

அப்போது இந்த கழிவுநீர் காங்கிரட் சுவர்களால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி ஆபத்தான நிலையில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் கான்கிரட்டுகளை எடுத்துவிட்டு புதிதாக கால்வாய் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதியானது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மேற்கு தொகுதியில் வருவதாலும், மேலும் தற்போது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிப்பதால் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பணிகளை முடிக்காத பட்சத்தில் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி பஸ் மறியல் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை எடுத்துள்ளனர்