• Fri. Apr 26th, 2024

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் நடித்த படங்களை இயக்கிய சேதுமாதவன் காலமானார்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில்60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று சென்னையில் காலமானார்.


இவர் இயக்கிய படங்களுக்காக நான்குமுறை சிறந்த இயக்குனருக்கான விருது உட்பட பத்து தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த ‛நாளை நமதே’, சிவகுமாரின் ‛மறுபக்கம்’, கமல்ஹாசனின் ‛நம்மவர்’ போன்ற படங்களை இயக்கி உள்ளார் சேதுமாதவன். ‛‛ஓடயில் நின்னு, யாக்ஷி, கடல் பாலம், ஆரா நாழிக நேரம், அச்சனும் பாப்பாயும், ஒப்போல்” உள்ளிட்ட மலையாளத்தில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தெலுங்கு, இந்தியிலும் படங்கள் இயக்கி உள்ளார். நடிகர் கமல்ஹாசனை மலையாள சினிமாவில் அறிமுகம் செய்ததும் இவர் தான். மலையாளத்தில் ‘ஜனசுந்தரி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘கன்னியாகுமரி’ என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்க வைத்தார். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த சேதுமாதவன், வயது மூப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார்.சேதுமாதவன் மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல் வெளியிட்ட இரங்கல் செய்தியில்

காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *