• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..!

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு, கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்,இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் திரட்டிய பல்வேறு வகையான பொருட்கள் இரண்டு லாரிகளில் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிக்கான நிவாரண பொருட்கள் அனுப்பும் வகையில், நேற்று இரவு (டிசம்பர் -20)ம் தேதி இரவு குமரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து. குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி வளாகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் உடன் புறப்பட்ட லாரியை மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்.இ.ஆ.பா. மற்றும் மாநகராட்சி பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து அனுப்பிய லாரியை மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்கள்.