சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் செம்மண் மற்றும் கல்குவாரி தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தில் சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி செயல்படும் செம்மண் மற்றும் கல்குவாரியை தடுத்து நிறுத்த வேண்டுவன விவசாயிகள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ள நீர் வழித்தட பாதை முழுவதையும் கற்களை போட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.
தினந்தோறும் இரவு பகலாக வெடிவைத்து வெடி வெடிக்கப்படுவதால் அருகே உள்ள விவசாய நிலங்களில் கற்கள் பறந்து விழுந்து வருகிறது.
எனவே இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கனிமவளத் துறை, வேளாண்மை துறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
சட்டத்திற்கு புறம்பாக உரிய அனுமதியின்றி செயல்படும் மண், கல்குவாரியில் தினந்தோறும் வெடிவைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலையும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீ ஏற்பட்டும் முற்றிலும் குறைந்து விட்டது.
எனவே இப்பகுதியில் உள்ள விவசாயத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மண், குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)