• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முன்பே தனுஷ்-ஐஸ்வர்யாவின் பிரிதல் பற்றி பதிவிட்டுருந்த செல்வராகவன்

Byகாயத்ரி

Jan 19, 2022

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.நேற்று முழுவதும் இச்செய்தி பேசு பொருளானது. இந்நிலையில் சின தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

அதில், தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்குமிடையேயான பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது தான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.