வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷிக்ஷா கேந்திரா பள்ளியில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெற்ற 22வது மாநில சப் ஜூனியர் வூஷு போட்டிகளில் தவுளு மற்றும் ஷான்ஷு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட வூஷு சங்கம் சார்பில் 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 18 தங்கப்பதக்கம்,2 வெள்ளிப்பதக்கம், 8 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
தற்பொழுது தங்கப் பதக்கம் வென்றுள்ள மாணவ மாணவிகள் அடுத்து நடைபெறவுள்ள 25-வது வூஷு தேசிய சப் ஜூனியர் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட வூஷு சங்கம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)