ஶ்ரீவில்லிபுத்தூரில் அய்யம்பட்டி தேவர் தெரு மற்றும் மேட்டு தெருவில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ் .எஸ். ஆர் . ராமச்சந்திரன் அறிவுரைப்படி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சீர் மரபினர் நல வாரிய துனைத்தலைவர் ராஜா அருண்மொழி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொண்டார். நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், திமுக கழக நிர்வாகிகள் சமுதாய தலைவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முகாமின் முடிவில் 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.