• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

ByP.Kavitha Kumar

Jan 2, 2025

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் இன்று(ஜன.2) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு விடுப்புக்கு பின்னர் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இந்த நிலையில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

மழை பாதித்த கடலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாவட்ட அளவில் ஜன.2 (இன்று) முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது