பாரத தேசத்தின் 77 வது குடியரசு தினம் நமது தேசம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட தலைநகர் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறை அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள், கலந்து கொண்டார்கள். விழாவில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம்,மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இருவரும் சமாதான புறாக்களை பறக்க விட்டு, பின்பு பள்ளி மாணவ மாணவியர்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்







