கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சபீனா கல்லூரி மாணவி.

இவர் பள்ளியில் படிக்கும் போது காவுவிளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளன.
இந்த நிலையில் மாணவியின் திருமணத்திற்காக ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வருவதை அறிந்த தனுஷ் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்பந்த கேட்டதாக தெரிகிறது .

இதற்கு சபீனாவின் பெற்றோர் ஒத்துழைக்காததால் கோயம்புத்தூரில் வேலை பார்க்கும் தனுஷ் நேற்று இரவு கல்வெட்டாங்குழியில் உள்ள காதலியின் வீட்டுக்கு வந்து இரவில் வீட்டின் பின்புறமாக சென்று காம்பவுண்ட் வழியாக ஏறி மொட்டை மாடிக்குச் சென்று வாசலில் முன்னுள்ள கம்பியில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய தனுஷின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து உடல் கூறு ஆய்வுக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் எடுத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
பள்ளி பருவத்திலே காதலித்து தான் காதலித்த பெண்ணை அடைய முடியாததை உணர்ந்து காதலன் காதலியின் வீட்டில் மொட்டை மாடியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.