
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஸ்ரீ சைதன்யா பள்ளி உள்ளது.வழக்கம்போல் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக பட்டணம் பகுதிக்கு பள்ளி வாகனம் சென்றுள்ளது.
இந்நிலையில் மசராயன் கோவில் அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பள்ளி வாகனத்தில் 5 மாணவர்கள் உள்ளே இருந்த நிலையில் அதில் ஒரு மாணவர் மட்டும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
டிரைவர் மற்றும் சக பள்ளி மாணவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்.
பள்ளி வாகனம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடைய பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சூலூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
