• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படைப்பாளியை காப்பாற்றுங்கள் – பாலுமகேந்திரா நூலகம் கோரிக்கை

Byதன பாலன்

Jan 29, 2023

குடிசை ஜெயபாரதி .. எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார் . அதற்கு தேவைப்படும் மருந்துகள் வாங்ககூட பணமில்லாமல் அவதிப்படுகிறார். இவருடைய நிலையை அறிந்து பாலு மகேந்திரா நூலகத்தில் இருந்து கதையாசிரியரும் வசனகர்த்தாவுமான அஜயன்பாலா
கொளத்தூரில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது .மனைவியுடன் தனியாக வசித்துவரும் குடிசை ஜெயபாரதியின் நிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்ததுடன் பாலுமகேந்திரா நூலகம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கையில்

நண்பர்களே தமிழ் நாட்டில் 1980களில் எதார்த்த சினிமா அலை பேரெழுச்சியாக துவங்கிய போது பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா ஆகியோருடன் பல இயக்குனர்கள் இந்த எதார்த்தவாத அலையில் களமிறங்கினர். அதில் குடிசை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் இயக்குநர்ஜெயபாரதி. தமிழ் நாட்டின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படம் .வெறும் 90.000 ம் ரூபாயில் எடுக்கப்பட்ட குடிசை படம் .1979 ல் வெளியாகி பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. . பிடிவாதமாக எதார்த்த சினிமா மட்டுமே எடுப்பேன் என்ற முயற்சியில் தொடந்து பயணித்தவர் .அவள் அப்படித்தான் எடுத்த இயக்குனர் ருத்ரையாவின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் படத்தில் நாயகனாக நடிக்க தேர்வு தேர்வு செய்யப்பட்டு பின் அதிலிருந்து விலகி மீண்டும் இயக்க ஆரம்பித்தார் குடிசையை தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னையை மையமாக கொண்டு பாக்யராஜ் நடிக்க ஊமை ஜனங்கள், 1984ல் வெளியிட்டார் தொடர்ந்து உச்சி வெயில் 1991, நண்பா நண்பா 2002,சத்யராஜ் நடித்த குருஷேத்திரம் 2006, ஆகிய படங்களை இயக்கினார்
இதில் உச்சி வெயில் இந்தியன் பனோரமாவில் தேர்வுசெய்யப்ப்ட்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்ற திரைப்படம், அதுபோல நண்பா நண்பா அதில் நடித்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்த திரைப்படம் 2010 ல் இவர் கடைசியாக இயக்கிய புத்திரன் திரைப்படம் வெறும் 6 லட்சத்தில் 13 நாளில் எடுக்கப்பட்ட படம் . இத்திரைபடம் அந்த ஆண்டின் சிறந்த படமாக தமிழ்நாட்டு அரசால் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு திமுக அரசால் கவுரவிக்கப்பட்டது
எண்ணிக்கையில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் மாற்று சினிமா எடுப்பேன் என பிடிவாதமாக இயங்கியவர்.
மாற்று சினிமாவுக்காக கருத்தரங்கம் நடத்தும் பண்பாட்டு அக்கறை கொண்ட நம் தமிழக அரசு இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு இன்று நலிவுற்று இருக்கும் படைப்பாளிகளின் இறுதிக்கால மருத்துவ செலவுக்காக ஏதேனும் அக்கறை எடுத்துக்கொள்வது அந்தப் பாதையில் பயனிப்பவரகளுக்கு பேருதவியாக இருக்கும்
குடிசை ஜெய்பாரதிக்கு நீங்கள் செய்யும் பொருளாதார உதவி அவரை நெருக்கடியான உடல் நிலையிலிருந்து ஓரளவு காப்பாற்றக்கூடும்
அவரது மனைவி ப்ரீத்தா ஜெயராமன் அவர்களின் வங்கி முகவரி மற்றும் கூகுள் பே எண் கீழே கொடுத்திருக்கிறேன் உங்களால் முடிந்த தொகை அவருக்கு செலுத்தி உதவவும்

Preetha jayaraman
AC no 189301000001083
IFSC. IOBA0001893
Indian Overseas Bank
Gpay no : +91 97917 21963

தொலைபேசி தொடர்புகொள்ள
Jeyabaarathi : 97899 66945