• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுபானங்களை கடத்திய சதீஸ்கண்ணன் கைது

ByAnandakumar

May 6, 2025

பாண்டிச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி கரூரில் வீட்டில் வைத்திருந்த சதீஸ்கண்ணன் கைது செய்து, 233 மது பாட்டில்கள் கார், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

பாண்டிச்சேரி மதுபானங்களை கார் மூலம் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கரூர், சுக்காலியூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கரூர் மாவட்ட மதுவிலக்க அமலாக்க துறை காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது கரூர் to சேலம் பை-பாஸ் சாலை வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ்கண்ணன், வயது 38, என்பவரை சோதனை செய்து அவரை விசாரித்தபோது அவர் கடந்த 02 நாட்களுக்கு முன்பு தனது Santro DX காரில் பாண்டிச்சேரியிலிருந்து மதுபானம் 750 ML அளவு கொண்ட 108 பாட்டில்களும், 375 ML அளவு கொண்ட 23 பாட்டில்களும், 180 ML அளவு கொண்ட 102 பாட்டில்களும் ஆக சுமார் ரூ. 51,900/- மதிப்புள்ள 233 மது பாட்டில்களை கடத்தி தனது வீட்டில் காரில் வைத்திருப்பதாக கூறியவரை அழைத்துச்சென்று அவரது வீட்டில் காரில் இருந்த மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கேரளா மாநில பதிவு எண் கொண்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மதுபானங்களை கடத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.