• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மக்களை சந்திக்க சுற்றுப்பயணமா..சசிகலா ரெடி

Byகாயத்ரி

Feb 3, 2022

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி அனைத்து அரசியல் பிரமுகர்களும் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தி வகுகின்றனர். தி.நகரில் உள்ள இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் இதயக்கனியாக அண்ணாவின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல இயக்கத்தை தொடங்கினார் புரட்சித் தலைவர். அண்ணாவின் வழியில், புரட்சித்தலைவர் வழியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்.அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தமிழகத்தில் கொண்டு வருவோம். யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கடந்த 8 மாதத்தில் மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள். நிச்சயம் அனைவரையும் அரவணைத்து செல்வோம். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படக்கூடாது.கொரோனா காலகட்டம் என்பதால் மக்களை சந்திக்க முடியவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்னர் விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன் என்று சசிகலா கூறியுள்ளார்.