பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த தினக்கூலி 609 ஐ வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
2ம் நாளான இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து தனியார் ஒப்பந்த நிறுவனமான ராம் அன் கோ நிறுவனத்தின் சார்பில் வட மாநிலத்தவர்கள் சிலரை தூய்மை பணிகளை மேற்கொள்ள பணிக்கு அழைத்து வந்ததால் தமிழக தூய்மை பணியாளர்கள் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் மீண்டும் பணிக்கு சென்றனர்.
வடமாநிலத்தவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்த முயன்றதால் ஏற்கனவே பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் விரக்தி. தூய்மை பணியாளர்களை குப்பை சேகரிக்கும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்ற அவலம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு பாரம்பரியமிக்க நகராட்சியாகும் .மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்ட இந்த நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் 70 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் .மொத்தம் 120 தூய்மை பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 70 க்கும் மேற்பட்டோர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனமான ராம் அன் கோ நம்பர் ஒன்றுக்கு 400 ரூபாய் வழங்கி வருகின்றனர். ஆனால் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.06.2023 ம் தேதி அறிவித்த குறைந்தபட்ச கூலி தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூபாய் 609 ஐ நிலுவ தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் 70 க்கும் மேற்பட்டோர் நேற்றைய தினம் பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெரியகுளம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த EPF – ESI யில் தொடர்ந்து முறையீடு ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனமான ராம் அன் கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கு தேசிய விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் முழு நேர விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். தளவாடப் பொருட்கள் யூனிஃபார்ம் முறையாக வழங்க வேண்டும். மக்கள் தொகை கேட்ப தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று காலை வரை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் ராம் அன் கோ தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோரை வரவழைத்து பணியில் அமர்த்த முற்பட்டுள்ளனர் .இதனைத் தெரிந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஆராய்ச்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள பணிக்கு சென்றனர் .
வடமாநிலத்தில் இருந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக அழைத்து வரப்பட்ட நபர்களை பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அங்கு வரப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைகள் சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் .குப்பைகள் சேகரிக்கும் வாகனத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்றது அங்கு காண்போர்களை முகம் சுளிக்கும் வண்ணம் இருந்தது .தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் இத்தகைய செயலை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டித்து வருகின்றனர் .





