கார்த்திகை மாதத்தில் முதல் சோமவாரத்தில் திங்கள் கிழமை அன்று சிவலிங்க திருமேனிக்கு சங்காபிஷேகம் நடைபெறும் இந்த சங்காபிஷேகம் மாலை வேளையில் சிவன் சன்னதிக்கு முன்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.சுகந்த பரிமளேஸ்வரர் உடன் பெரியநாயகி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரமான திங்கள் கிழமை இன்று சிவன் சன்னதிக்கு முன்பாக 108 சங்குகள் மூலம் சிவன் திருமேனி வரைந்து தலைவாழை இலையில் அரிசி போட்டு தர்பை புல் வைத்து சங்குக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்து சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் சிவப்பு நிற துணியில்

மிகப்பெரிய வலம்புரி சங்கை வைத்து நீர் விட்டு வாசனை திரவியங்கள் வைத்து கலசத்தில் சிவபெருமானை வர்ணித்து சோமவாரத்தில் சங்காபிஷேக வைபவம் மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)