• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

Byவிஷா

Oct 12, 2022

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவுக்கு தோல் சம்மந்தப்பட்ட கோளாறு இருந்ததாக பரவிய வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்தது அவரது ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திய சமந்தா கவர்ச்சியான வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார்.
இப்படி சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வந்த சமந்தா திடீரென்று தன்னுடைய புகைப்படங்கள் எதையும் பதிவேற்றவில்லை. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே தோல் சம்மந்தமாக சில பிரச்சனைகள் இருந்த நிலையில் இப்போதும் அந்த பிரச்சனையால்தான் ஷோசியல் மீடியாவில் புகைப்படங்களைப் பதிவேற்றவில்லை என்று வதந்திகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் அந்த வதந்திகளைப் பொய்யாக்கும் விதமாக கருப்பு நிற டி ஷர்ட் அணிந்து சமந்தா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த புகைப்படத்திலும் அவர் முகம் முழுவதும் தெரியாமல் பாதி மட்டுமே தெரிவது போல அமைந்துள்ளது.