• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை மையம்..,

BySeenu

Aug 14, 2025

மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய சிறிய ரக வர்த்தகப் பயன்பாட்டு வாகனப்பிரிவு (e-SCV) சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தனது விற்பனை மையத்தை துவக்கி உள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் காமராஜர் சாலையில் துவங்கி உள்ள இதற்கான துவக்க விழாவில், மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சாஜு நாயர், மற்றும் டிவிஎஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மது ரகுநாத் ஆகியோர் புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.

இது குறித்து இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில்,புதிய மோன்ட்ரா ரக சரக்கு வாகனங்கள் எளிதாக கிடைக்கும் வகையில் இந்த விற்பனை மையத்தை துவக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

மோன்ட்ரா இ-வியேட்டர் வாகனம், நல்ல திறனுடன் , நீடித்து உழைப்பதோடு, ஒட்டுமொத்த செலவில் சிக்கனம் என எல்லா கோணங்களிலும் சிறப்பான பலன்களை வழங்கக்கூடிய வாகனம் என தெரிவித்தனர்.

இ-வியேட்டர்,வாகனம் 245 கி.மீ. அளவுக்குப் பயணிக்கக்கூடியது எனவும், . இதில் உள்ள 80 கிலோவாட் மோட்டார், 300 என்.எம். டார்க் திறன் இருப்பதாகவும், இந்த வாகனத்திற்கு 7 ஆண்டுகள் அல்லது 2.5 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதம் வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் தனது முன்னணி இடத்தை உறுதி படுத்தும் வகையில், கோவையைத் தொடர்ந்து நாடு முழுவதும் சிறிய ரக வர்த்தக வாகனங்களுக்கான விற்பனை மையங்கள்,, பழுதுநீக்கு மையங்கள் ஆகியவற்றை விரிவுபடுத்த மோன்ட்ரா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.