• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சாக்சி அகர்வால்..!

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.இப்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ‘பருத்தி வீரன்’ சரவணன், சாக்சி அகர்வால், டயானாஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாக்க்ஷி அகர்வால் இந்தப் படத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்சமீபத்தில் சாக்க்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக் காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் படமாக்கப்பட்டது இந்த சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார். அதில் சாக்க்ஷி அகர்வால் டூப் போடாமல் நடித்தார் என்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
இப்படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக் கட்டமாகப் பின்னணி சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.இப்படம் 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும்.