சென்னை தாம்பரம் ராஜாஜி சாலையில் டார்லிங் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தை இன்று தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் டார்லிங் நிர்வாக இயக்குநர் வெங்கட சுப்பு, அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் சீனீவாச ராஜா, வசந்த பவன் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கடையில் அயன்பாக்ஸ் முதல், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பர்னிச்சர் என அனைத்து பொருட்களும் உலகத்தரத்தில் விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டார்லிங் நிர்வாக இயக்குநர் வெங்கட சுப்பு பேசுகையில் தமிழகத்தில் மிக பிரம்மாண்டமான கிளை, சென்னையிலேயே 163 கிளையாக திறந்திருக்கிறோம், இந்தியாவில் சிறந்த பொருட்கள் மிகப்பெரிய டிவி, ஹூட்டர், வாஷிங் மெஷின் விற்பனைக்கு வந்துள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர், இந்தோனோசியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். வியட்நாமில் இருந்து லெதர் வருகிறது
சோலார் குறித்து புரிதல் இல்லாமல் இருக்கிறது, அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து தயார் செய்து கொடுக்கிறோம்.
திருமணத்திற்கு தேவையான பொருட்கள் சிறிய லைட்டர் முதல் பெரிய டிவி வரை அனைத்தும் கிடைக்கும் என்றார்.
அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் ஈ.எம்.ஐயில் கொடுக்கிறோம்.
திறப்பு விழா சலுகையாக 3 நாட்களுக்கு விலையில் சலுகை வழங்கப்படுகிறது, தீபாவளி ஆஃபர் போல் தற்போது கொடுத்து வருகிறோம்.