நொய்யலை மலர் தூவி வரவேற்றார் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது, குறிப்பாக கோவை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஒய்யாரமாக பொங்கி வரும் தண்ணீரை மலர்தூவி வரவேற்றார் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. மேலும், பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பனை, காளவாய் தடுப்பனையிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்தபகுதிகளையும் ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி கரையோர பகுதி மக்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.