• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் போரில் ரஷ்ய ஜெனரல் பலி

உக்ரைன் போரில் ரஷ்யாவின் தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி உயிரிழந்தார். கடந்த 10 நாட்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் கடுமையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி கீவ் நகருக்கு வெளியே 30 மைல் தூரத்தில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் ரஷ்ய படையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவரது மரணத்தை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் ஜெனரலின் சக வீரர் செர்ஜி சிபிலியோவ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன. இதுவரை ரஷ்ய வீரர்கள் 498 பேர் போரில் உயிரிழந்ததாகவும், 1,500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை உயிரிழந்த ரஷ்ய வீரர்களில் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி மூத்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது