அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் உளவாய்க்கால் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தொடர்ந்து இயற்கைக்கு எதிராகவும்
எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்திற்கு எதிராகவும் சுயநலமாக புதுச்சேரியில்
இருக்கும் 500, ஆண்டுகளை கடந்த மரங்களை தன் அதிகார துஷ்பிரயோகம் செய்து வனத்துறை அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக செயல்படுகிறார்.
அமைச்சரின் செயல்பாட்டினால் மரத்தில் வாழும் சிறிய விலங்குகள், பறவைகள், புழ, பூச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் மனிதனுக்கு உயிர் காற்றான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
அமைச்சர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனத்துறையை தவராக பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிய சந்திரசேகரன்.

ஊசுட்டேரி சங்கராபரணி ஆறு வேல்ராம்பட்டு ஏரியில் மணல் திருட்டு சுமார் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள தேதிகாய்திட்டு சதுப்பு நிலக்காடுகள், நிலம், கடற்கரை ஆக்கிரமிப்பு என அமைச்சர் பதவியை பயன்படுத்தி சந்தன மரக்கடத்தல் போலி மதுபான தொழிற்சாலை, போதை மருந்து கடத்தல், போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.