விபத்தில்லா கோவையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.
கோவை மாநகரில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும் ‘உயிர்’ அமைப்பின் கீழ் தொடரச்சியாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக விபத்தில்லா கோவையை உருவாக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரன் வாக் எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியார் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
மூன்று கிலோமீட்டர் மற்றும் ஒரு கிலோமீட்டர் பிரிவில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் குழந்தைகள் பெரியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இதில் மாவட்ட ஆட்சியரும்,மாநகர காவல் ஆணையரும் இணைந்து ஓடினர்.
