நாகர்கோவிலில் கிம்ஸ் ஹெல்த் சார்பில்”புற்றுநோயை வெல்ல ஓடு”
கிம்ஸ் மராத்தான் ஓட்டத்தில் 600_க்கும் அதிகமான பேர் பங்கேற்றனர்.
இந்தியா மட்டும் அல்லாது, உலக பந்தில் ஓமான், சவுதி அரேபியா, கத்தார், யுனிடேட் அரபு எம்ராட், ஆகிய பகுதிகளில் இயங்கும் கிம்ஸ் ஹெல்த் பல்நோக்கு மருத்துவமனை, இந்தியாவில். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் பகுதியில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் கிம்ஸ் ஹெல்த் பல்நோக்கு மருத்துவமனை கடந்த செப்டம்பர் 24_ங்கு முதல் நாகர்கோவிலை அடுத்த சுங்கான் கடைபகுதியில் தொடங்கி தொடர்ந்து செயல்படுவதின் மூலம் குமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நோயாளிகள் மருத்துவத்திற்காக, திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் பல்நோக்கு மருத்துவ மனைக்கு சென்ற பயண தூரம் குறைந்து விரைவாக மருத்துவ சோதனை மற்றும் மருத்துவம் பெரும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

நாகர்கோவிலில் சுக்கான் கடை பகுதியில் உள்ள கிம்ஸ் ஹெல்த் பல்நோக்கு மருத்துவ மனை சார்பில், தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் புற்றுநோய் தாக்குதல் இயற்கையாகவே, இந்த பகுதியில் கதிர் இயக்க தாக்குதல் நிறைந்த ஒரு பகுதி.
குமரி மாவட்டம் மக்கள் மத்தியில், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எதிர் வரும் (பிப்ரவரி-23)நாள் நடந்த இருக்கும் மராத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த”புற்றுநோயை வெல்ல ஓடு” என்ற நிகழ்வை, நாகர்கோவில் அண்ணா விளையாட்டில் நடக்க இருப்பது குறித்து, கிம்ஸ் ஹெல்த் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
டாக்டர் எம் ஐ. சஹதுல்லா செய்தியாளர்கள் இடம் தெரிவித்தது.

திருவனந்தபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நோயால் துயர் படும் நோயாளிகளின் வேதனையை போக்கி நலம் பெற்று மகிழ்ச்சி உடன் இல்லம் திரும்பும் மக்கள் இந்த நிறுவனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள மருத்துவமனை நிர்வாகம். குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும், புற்றுநோய் 5_வகைகளில், எத்தகைய நோய் தாக்கம் பற்றி தெரிந்துக்கொள்ள, நோய் பாதிப்பின் தொடக்கத்திலே பரிசோதனை செய்து கொண்டு. நோயின் தன்மையை அறிந்து மருத்துவம் எடுத்துக்கொண்டால் நோயினால் இருந்து முழுவதுமாக நலம் பெற முடியும் என தெரிவித்தார்.

குமரி மாவட்ட மக்களின் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் சார்பில் எதிர் வரும் பெப்ரவரி 23_ம் நடக்கும் .புற்றுநோயை வெல்ல ஓடு என்னும் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் 600_க்கும் அதிகமான பேர் பங்கேற்பது முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் இருந்து இரண்டு பிரிவுகளாக 5.கிமீ,10.கிமீ தூரத்திற்கு நடைபெறவுள்ளது என்பதை தெரிவித்தார்.