• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகன உரிமையாளர்கள் புலம்பல்..,

ByKalamegam Viswanathan

Aug 7, 2023

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள வட்டார போக்குவரத்து கழகத்தில் அதிகாரி அடிக்கடி தாமதமாக வருவதால், மிக நீண்ட நேரம் காத்திருந்து வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் தங்களது வாகன உரிமத்தை புதுப்பித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக லாரி, வேன், பஸ், உள்ளிட்ட கனரக வாகனங்களும் ஆட்டோ உள்ளிட்ட இலகு ரக வாகனங்களும் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்காக காத்திருக்கின்றன. இது குறித்து, வாகன உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் பணி மாறுதல் கேட்டு தொடர் விடுமுறையில் உள்ளதால், வாகன புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் தாமதமாவதாக அலுவலகத்தில் தெரிவிப்பதாக கூறுகின்றனர். திங்கள் கிழமை மதியம் 12 30 மணி வரை வட்டார போக்குவரத்து கழக அதிகாரி வராததால், சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாகன புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக காத்திருந்தது வாகன உரிமையாளர்கள் விரக்தியின் எல்லைக்கு சென்றனர். மேலும், அதிகாரி வர தாமதமானதால் , பாதி வாகனங்கள் உரிமம் புதுபிக்கப்படாமலே திரும்பிச் சென்றன. ஆகையால், இது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து,
வாடிப்பட்டி வட்டாரப் போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய்வாளரை, நிரந்தர அதிகாரியை நியமித்து வாகனங்களை விரைவில் சோதனை செய்து ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.