ராஷ்ட்ரிய சுயம் சேவாக்கின் சார்பில். ஜெயங்கொண்டத்தில் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊர் முக்கியஸ்தரான வரதராஜன் கொடி அசைத்து வைத்து தொடங்கிய பேரணி வேலாயுதம் நகர் பகுதியில் இருந்து கடைவீதி சன்னதி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பேரணியானது பெருமாள் கோவில் அருகே நிறைவடைந்தது தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் செல்வம் தலைமை வகித்தார் டாப் 10 உணவு பொருட்கள் மற்றும் அமுமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில். நாம் நாம் ஊடகம் வழியாக மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை செய்வது கிடையாது ஆனால் இப்பொழுது அரசு அனைத்து ஊடகங்கள் வழியாக நம்மை விளம்பரம் செய்கிறது, அவர்களுக்கு முதலில் நன்றி, நாம் அனைவருக்கும் முதல் கடவுள் பாரத நாடு தான் அதன் பின்பு மற்ற தெய்வங்கள் நமக்கு கடவுள் இதுதான் நமது கொள்கை நாம் பணத்திற்காக பதவிக்காக ஆர்எஸ் எஸ்சில் இணையவில்லை. மக்களுக்கு சேவை செய்வதை சுயம் சேவகர்களின் தலையாய கடமை என்று கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கோட்டச் செயலாளர் செல்வம் உட்பட ஆர்எஸ் எஸ்சின் நூற்றுக்கணக்கான சுயம்சேவகர்கள், பி எச் பி இந்து முன்னணி பிஜேபி உட்பட பரிபார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளானோர் பேரணியில் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ் பி பரோஸ் கான் அப்துல்லா தலைமையில், ஏடிஎஸ்பி அந்தோணி ஆறி, டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், கணேஷ்உட்பட 10 இன்ஸ்பெக்டர்கள் 20க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
