• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

ஆபாச பேச்சுக்கு அபராதம் ரூ.25 லட்சம் : ரீட்டா சுளீர் பேட்டி

ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் என்னைப் பற்றி ஆபாசமாகப் பேசியதற்கு அபராதமாக, என்னுடைய வாழ்வாதாரத்துக்காக ரூ.25 லட்சம் தரவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜுக்கு மிரட்டலான கோரிக்கை விடுத்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி இணைச்செயலாளர் ரீட்டா, செய்தியாளர் சந்திப்பில் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.


ரீட்டா-வின் உருக்கமான பேட்டி இதோ; ‘மான்ராஜுக்காக கட்சில வேலை செஞ்சேன். நான் உண்மையா, கட்சிக்காக உழைச்சிருக்கேன். எனக்கும் மான்ராஜ் அண்ணனுக்கும் எந்த ஒரு இதும், தொடர்பும் கிடையாது. கட்சில உழைச்ச என்னை, அவங்களும் இன்னொரு லேடியும் பேசுற விஷயத்துல ரொம்ப தரம் தாழ்த்தி பேசிருக்காங்க. அத, அந்த விசயத்த பேசிருக்கதுனால, என்னால வெளிய நடக்க முடியாது. அதாவது, ஒரு லேடிய தரக்குறைவா, ரொம்ப தரக்குறைவா, அவள முழுசா பார்க்கணும்னா 3 மாசம் ஆகும். அவள இப்படி பார்க்கணும்.. அப்படி பார்க்கணும்.. அப்படி எல்லாம் கேட்டு அசிங்கமா பேசிருக்காங்க.

நான் நலவாரியத்துகிட்ட லோன் வாங்கி செய்வேன். இப்ப இதுனால எனக்கு வெளிய போக முடியல. நான் எந்த லேடிஸ்ட்டயும் பேச முடியல. என்கிட்ட 20 வயசு பொண்ணு வேணும்ன்னு கேட்டதுனால, என்கிட்ட யாரும் எப்படி பேசுவாங்க. அதுனால, நான் ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கேன். என் பிள்ளைகளும் ரொம்ப கஷ்டப்படறாங்க. எனக்கு மென்டல் டார்ச்சர் ஆகுது.


யூடியூப்ல வந்ததுல இருந்து, ஒரு வாரமா தற்கொலைக்குத்தான் எண்ணம்போகுதே தவிர, இருக்க பிடிக்கல. ஆன்லைன்ல கம்ப்ளைன்ட் பண்ணிருக்கு. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. வக்கீல்ட்ட போனாகூட, எந்த வக்கீலும் எடுக்க மாட்டேங்குறாங்க. சிட்டிங் எம்.எல்.ஏ.. அவங்கள மீறி எதும் செய்ய முடியாது. அவங்ககிட்ட பண பலம் அதிகம். உங்ககிட்ட ஒண்ணும் இல்ல. அப்படின்னு எதும் எடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டாங்க. கடைசியா சாந்த குமார் வீட்டுக்கு வந்துருக்கேன். அவங்க பேசுறது நடவடிக்கை எல்லாம் பார்த்தீங்கன்னா, சாதரணமா ரோட்டுல லேடீஸ் போனா, இடிச்சிட்டு போனா சத்தம் போடுவோம். ஆனா என்னை அவ்ளோ வல்கரா பேசிருக்காங்க.


அந்த வார்த்தைய கேக்கவே முடில. பேசுனது இன்னாசியம்மா. அவங்க யார் கிட்டனாலும் பேசிக்கலாம். அது அவங்க பெர்சனல். அவங்க பர்சனல்ல எதுக்கு என்னை அப்படி பேசணும்? கட்சில வேலை பார்த்தவங்கள இப்படி பேசுறதுக்கு, அவளுக்கு அப்படி இப்படி, அவள ஒருக்க நீ கூட்டிட்டு வா.. அப்படி பேசுறாரு. நான் ஒருநாளும் இப்படி முறை தவறி பேசுனது இல்ல. அண்ணேன்றதுக்கு மறு வார்த்தை பேசுனது இல்ல. இந்த விஷயம்.. மான்ராஜ் மனைவி வசந்தி அக்காக்கு 4 மாசத்துக்கு முன்னாடியே தெரியும். நான் சொல்லிருக்கேன். ஆனா.. அது பத்தி கூட என்கிட்ட கேட்க வரல. கட்சில வேலை பாத்ததுக்கு எனக்கு ரூவா தராதனால, எனக்கு ராமையா பாண்டியன் அண்ணனும் பண்டிதன்பட்டி முனியாண்டி அண்ணனும், கட்சில வேலை பார்த்ததுக்கு 100 ரூபாய் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு, 30,000 கொடுத்துட்டு, இந்த ஆடியோவ யார் கிட்டயும் கொடுக்கக்கூடாது, யாருகிட்டயும் இது பத்தி பேச கூடாது.. பேசினா பிரச்சனை வேற மாதிரி வரும். வேற மாதிரி உங்க மேல கேஸ் போடுற மாதிரி வரும். வீணா நீ தான் அசிங்க படுவன்னாங்க. அதுனால நான் பேசாம இருந்தேன். இப்ப வெளிய வந்துருச்சு. சுத்தமா என்னால வெளிய போக முடில எல்லாரும் என்னை தப்பான முறைல கேக்குறாங்க.’ என்றெல்லாம் ‘நிறைய’ பேசினார். அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜுவின் ஆபாச பேச்சுக்காக, ரீட்டாவிடம் அக்கட்சியினர் ‘கட்டப்பஞ்சாயத்து’ நடத்தியதெல்லாம், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.