• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணம் இல்லாததால் ரூ.100000 ரொக்க பணத்தை பறிமுதல்…

ByK Kaliraj

Mar 23, 2026

சாத்தூரில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அவ்வழியாக வந்த பட்டாசு தொழிற்சாலைக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட போது டிரைவரிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகா முத்துச்சாமி புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி ( வயது 36) இவர் சாத்தூரில் பட்டாசு மூலப் பொருள் வாங்க செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் ரொக்கப் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் பறக்கும் படையிரனால் அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து துணை தேர்தல் அலுவலர் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர்.

அதே போல் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள இ.எல்.ரெட்டியபட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனை நடத்திக் கொண்டு இருந்த போது ஏழாயிரம் பண்ணையில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் பனையடிப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ராமச்சந்திரன் (வயது 48) என்பவரிடம் ரூபாய் 66,450 ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.அதனையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.