திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பிரிவில் வருவாய்துறை அலுவலர் உமாதேவி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது தேனி மாவட்டம் போடியிலிருந்து வத்தலக்குண்டு வழியாக விழுப்புரம் ஆட்டுச்சந்தையில் இரம்ஜான் பண்டிகைக்காக ஆடுவாங்கச் சென்ற ஆட்டு வியாபாரிகள் உரிய ஆவனமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 1.81,100 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து நிலக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாலகுருநாதனிடம் ஒப்படைத்தனர்,அவர்கள் அதனை சீல் வைத்து பத்திரமாக கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.



