மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சனிக்கிழமை மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன் எம்விபி ராஜா முன்னால் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் பேரூர் செயலாளர் முருகேசன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் வக்கீல் தங்கபாண்டி ராஜேந்திரன் தென்கரை ராமலிங்கம் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர் பி குமார் புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் மாவட்டமகளிர் அணி இணை செயலாளர் சாந்தி மாரிமுத்து அம்மா பேரவை துரை தன்ராஜ் இலக்கிய அணி ரகு நிர்வாகிகள் பாலகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் மருத்துவர் கருப்பையா மண்ணடி மங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு பேட்டை முத்துக்குமார் ஜேசிபி சுரேஷ் வெல்டிங் மாரி வைகை ராஜா பாலா அப்பாச்சி கண்ணன் துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ் தியாகு குருவித்துறை விஜய் பாபு வழக்கறிஞர் காசிநாதன் தண்டலை மனோகரன் கருப்பட்டி செல்வகுமார் மேல் நாச்சிகுளம் கிளைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணி செய்து கொண்டிருந்த பெண்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராமத்திற்கு பேருந்து வசதி அடிப்படை வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் கடந்த நாலரை ஆண்டுகளாக செய்து தரவில்லை என முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் கூறினர். அவர்களிடம் ஆறு மாதங்கள் பொறுத்திருங்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் உங்களது குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.