திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளி விக்னேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரை மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் 31 என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டினார்.
இதையடுத்து குற்றவாளி விக்னேசை டி.எஸ்.பி கார்த்திக் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
காயமடைந்த சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




