புதுச்சேரி தமிழக எல்லையான கோட்டகுப்பம் முன்பு புதுச்சேரி எல்லையில் பெங்களூர் ஐயங்கார் என்ற பெயரில் பேக்கரி இயங்குகி வருகிறது.
இன்று பிற்பகல் பேக்கரிக்கு வந்த மூன்று இளைஞர்கள் கடை ஊழியரிடம் கடையின் உரிமையாளர் எங்கே என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் சாப்பிடுவதற்கு வெளியே சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்பொழுது அந்த இளைஞர்கள் தான் பெரிய ரவுடி என்றும் தனக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
மேலும் பேனா மற்றும் பேப்பரை வாங்கி பெயர், ஜிபே நம்பரையும் எழுதி கொடுத்து கடை உரிமையாளரிடம் கொடுக்க சொல்லி உள்ளார்.

அப்போது அந்த பேப்பரை வாங்கிய ஊழியர் அதனை ஓரமாக வைத்துவிட்டு கடையின் உள்ளே சென்றார், இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கினர்.பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவசங்கரன் எம்.எல்.ஏ, மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பேக்கரிக்கு வந்த ரவுடிகள் தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பட்ட பகலில் கத்திய காட்டி மிரட்டி கடை ஊழியரிடம் மாமூல் கேட்டு, பேக்கரியை பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.