காரைக்கால் ரோட்டரி கிளப் ஆப் சென்டினல் 22வது பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விநாயக மிஷின் மெடிக்கல் காலேஜ் முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் கோவை மாவட்ட உதவி ஆளுநர் வில்லியம் ஜேம்ஸ் முன்னிலையில் 21 வது சங்கத் தலைவர் கணேஷ் ராஜாராம் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் 22வது தலைவர் குணசேகரனுக்கு ரோட்டேரியின் காலரை அணிவித்து பதவி ஏற்றுக்கொள்ள வைத்தார். சங்கத்திற்கு செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக கோபிநாத் மற்றும் சங்க உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர்கள், மூத்த உறுப்பினர்கள் பல்வேறு அமைப்பிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரிக்கு காரைக்கால் ரோட்டரி கிளப் ஆப் சென்டினல் சார்பாக கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தேசிய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றதை பாராட்டியும் மாணவர்களுக்கு கராத்தே கற்பித்து வருவதை ஊக்குவிக்கும் வகையில் கராத்தே மாஸ்டர் ஆஷிக் ரோட்டரி சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார். கலை மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பதவி ஏற்பு விழாவில் புதிய உறுப்பினராக சுப்பிரமணியன் ரோட்டரி சங்கத்தில் இணைந்தார்.