நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி பரிசளிப்பு நிகழ்சியுடன் நிறைவடைந்தது.
இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் கடல்வாழ் உயிரினங்களை’ காப்பாற்றும் நோக்கத்தில் ரோஜா மலர்களால் ஆன விழிப்புணர்வு உருவங்கள், வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

டால்பின்,முத்து சிப்பி,நத்தை ,மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடல் பசு, போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், வண்ணமயமான ரோஜா மலர்கள் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இதில் 80 ஆயிரம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட டால்பின் உருவம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து,
இந்த ரோஜா மலர்கண்காட்சி சனிக் கிழமை தொடங்கி ஞாயிறு,திங்கள் என மூன்று நாட்கள் நடைபெற்றது.
மலர்களைக் கொண்டு சிறந்த வடிவமைத்தவர்கள், சிறந்த முறையில் ரோஜா தோட்டம் பராமரித்திருப்பவர்கள், என 36 போட்டியாளர்களுக்கு 12 சுழற் கோப்பைகள்,30 முதல் பரிசுகள்,27 இரண்டாம் பரிசுகள் மற்றும் 46 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பெஸ்ட் புளும் ஆப் த ஷோ கோப்பை அருவங்காடு கார்டைட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டது. இந்த நிறைவு நாள் நிகழ்சியில் உதகை கோட்டாட்சியர் சதீஷ்,தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.