தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ வடகரை கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சைலா பானு மற்றும் அவரது மகன் முகமது ஸ்பாகுல் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஷகிலா பானு சில தினங்களுக்கும் முன்பாக உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்ற நிலையில் அவரது மகன் முகமது ஸ்பாகுல் இரவு வேலை வெளியே சென்று நிலையில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதனிடையே வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முகமது ஸ்பாகுல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் உள்ளே சென்று பார்க்கும் போது பொருட்கள் மற்றும் நகை திருடு போகிறது தெரியவந்ததை தொடர்ந்து பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பைரவ உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பூட்டி இருந்த வீட்டில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நகை திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.