• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ByP.Thangapandi

Jul 22, 2024

உசிலம்பட்டி அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் செளந்திரபாண்டியன், தாலுகா காவல் சார்பு ஆய்வாளர்கள் மதுரைபாண்டி ,முருகன், கலைமுருகன், பள்ளி தலைமையாசிரியர்கள் சரவணகண்ணா மற்றும் சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கடந்த மாதம் சாலைவிபத்தில் உயிரிழந்து உடலுறுப்பு தானம் செய்யப்பட்ட செல்வேந்திரன் நினைவாக மரம் கன்று நடப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியானது செட்டியபட்டி, அண்ணாநகர், நடுப்பட்டி, நோட்டம்பட்டி, வாசிநகர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வு ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியாவால் நடத்தப்பட்டது.