தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலையில் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பாக வாகன ஓட்டுமாறும், ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டுமாறும், நான்கு சக்கர வாகனங்கள் செல்வோர் சீட் பெல்ட் அணிவதன் தீர்த்துவத்தை குண்டு பிரசுரங்களாக வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் உத்தமபாளையம் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் ஹெட் கான்ஸ்டபிள் ஆர்த்தி விழிப்புணர்வை துவக்கி வைத்தனர். கல்லூரியில் உள் மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் முகமது சமீம் தலைமையில்கல்லூரி சாலை பாதுகாப்பு சூழல் ஒருங்கிணைப்பாளர் சாகித் அகமத் மற்றும் முகமத் ஒருங்கிணைப்பு செய்து இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் மத்தியிலும், வாகன ஓட்டிகள் மத்தியிலும் விழிப்புணர்வை நடத்தினர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.








