சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் நாட்டரசன்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பாகனேரி நெடுஞ்சாலை வரை சானாகுளம், இலந்தைமங்கலம், மாங்காட்டுப்பட்டி வழியாக செல்லும் 6 கி.மீ. நீளமான கிராமச் சாலை, தற்போது முற்றிலும் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலைக்குப் போயுள்ளது.

இந்த சாலையை புதுப்பிக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.4.26 கோடியில் பிரதமரின் கிராமச் சாலைத் திட்டத்தில் புதிய சாலை அமைக்கும் ஒப்பந்தம் விடப்பட்டது.
சாலைப் பணிகள் 2024 செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2025 ஜூன் 10க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தன. எனினும், திட்டத்தில் வரும் பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அனுமதி கிடைக்காததால் பணிகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இலந்தைமங்கலம் கிராம மக்கள், மாவட்ட வன அலுவலர் பிரபாவை நேரில் சந்தித்து, பணியை தாமதிக்கவைக்காமல் உடனடி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.