• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2025

மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் கிராமத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அரசு புறம்போக்கு இடம் எனக் கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் காவல்துறை உதவியுடன் முள்வேலியை அகற்றியதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இஸ்லாமிய பொதுமக்கள் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திருவாலவாயநல்லூர் பிரிவு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவாலவாயநல்லூர் கிராமத்தில் வக்பு வாரிய இடத்தை அரசு புறம்போக்கு இடம் என கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இன்று காலை ஜேசிபி எந்திரம் மூலம் மசூதி அருகே 1.70 சென்ட் இடத்தில் இருந்த முள் வேலியை அகற்றினர்

இதனை தொடர்ந்து வாடிப்பட்டி வட்டாட்சியரை கண்டித்து மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திருவாலவாயநல்லூர் பிரிவு சர்வீஸ் சாலையில் இஸ்லாமிய பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும் போது 200 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாலவாயநல்லூரில் மசூதிக்கு அருகே சுமார் 1.70. ஏக்கர் விவசாய இடமும் உள்ள நிலையில் எங்களின் மசூதி பாதுகாப்பிற்காகவும் மஜமாத்தார்கள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அங்கே முள்வேலி அமைக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் வாடிப்பட்டி வட்டாட்சியர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் முள்வேலியை அகற்றினார் உடனடியாக அங்கிருந்த எங்களது சமுதாய மக்கள் இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் முள்வேலியை அகற்றுவது சட்டவிரோதம் என கூறினர்.

ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாத வாடிப்பட்டி வட்டாட்சியர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி முள்வேலியை அகற்றி சென்றார். மேலும் அவர் இது அரசாங்கம் இடம் என்று கூட கூறவில்லை முழுக்க முழுக்க இது எனது இடம் என அவர் தனிப்பட்ட முறையில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பேசினார். இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இது போன்ற வட்டாட்சியர் இருக்கும் பட்சத்தில் எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். ஆகையால் வாடிப்பட்டி வட்டாட்சியரை உடனடியாக மாற்ற வேண்டும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதற்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் அடையாள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க இருந்த நிலையில் அவர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நாளை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க இருக்கிறோம். அப்போது வாடிப்பட்டி வட்டாச்சியர் குறித்து புகார் அளிக்க இருக்கிறோம் மேலும் எங்களது ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் அனைத்து அடையாளங்களையும் மாவட்ட ஆட்சியர் இடத்தில் ஒப்படைக்க இருக்கிறோம்.

நாங்கள் இங்கு அகதிகளாக கூட வாழ்ந்து விடுகிறோம். இந்த திமுக அரசு எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பையும் அளிக்கவில்லை முழுக்க முழுக்க சிறுபான்மையினருக்கு எதிரான அரசாகவே இது செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மாடிப்பட்டி வட்டாட்சியர் உடந்தையாக இருக்கிறார். அவரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.