• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம்..,

ByT. Balasubramaniyam

Sep 4, 2025

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷா தன்னார்வலர்களால் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக விவசாய நிலங்களில் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் மகோற்சவம் நேற்று தொடங்கப்பட்டது.

விவசாயிகளின் பொருளாதார வளம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டையும் இணைக்கும் சத்குரு அவர்களின் நோக்கத்தை காவேரி கூக்குரல் செயல்படுத்தி வருகிறது.
தேக்கு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், மகாகனி, ஆச்சா, சிசு, குமிழ், மலைவேம்பு போன்ற மரங்கள் மர விவசாயத்திற்கு உகந்தவை. மேலும் டிம்பர் மரங்கள், மிளகு போன்ற நறுமண பயிர்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி மூலம் விவசாயிகளின் வருமானம் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்க முடியும் என்பதால் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயம் செய்ய காவேரி கூக்குரல் ஊக்குவித்து வருகிறது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 61 விவசாய நிலங்களில், 235 ஏக்கர் பரப்பளவில் 64,180 டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டது. மேலும் ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து நடத்தும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் 24 கிராமங்களில் 120 அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதன்படி சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்த நா ளினை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்திலுள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கரநாராயணன் என்பவர் நிலத்தில் நடந்த மரம் நடும் நிகழ்வில் , 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் காவேரி மற்றும் தமிழக ஆறுகளின் வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு காவேரி கூக்குரல் திட்டமிட்டுள்ளது.

காவேரி கூக்குரல் மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சிகளையும் ஏற்பாடு செய்துவருகிறது. விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரங்கள் நடவு மற்றும் தொழில்நுட்ட ஆலோசனைகள் விவசாய நிலக்களுக்கே நேரடியாக சென்று இலவசமாக வழங்கப்படுகிறது.

தற்போது மழைகாலம் துவங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. டிம்பர் மரக்கன்றுகள் 5 ரூபாய்க்கும், பொதுவான மரக்கன்றுகள் 10 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. மேலும் ஜாதிக்காய், அவகோடா, சர்வசுகந்தி, லவங்கம், மிளகுக் கன்றுகள் குறிப்பிட்ட அளவு இருப்பு உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.