• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விண்கல் பூமியைத் தாக்கும் அபாயம் : நாசா எச்சரிக்கை

Byவிஷா

Feb 19, 2025

விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாகவும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2032ஆம் ஆண்டில் 2024 ஒய்ஆர்4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியது என்று நாசா தெரிவித்துள்ளது.
இது பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு 2.6இல் 3.1சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. 8 மெகா டன் ஆற்றலை வெளியிடும் இந்த விண்கல், ஷிரோஷிமா அணு குண்டை விட 500 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அழியலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.