• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எலக்ட்ரானிக் கழிவுகள்,குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

ByKalamegam Viswanathan

Nov 2, 2024

சாலை முழுவதும் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 74 வது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்ட ராமர் கோவில் செல்லும் வழியில் சாலை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பழைய குளிர்சாதன பெட்டி மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் அதிக அளவு சாலையில் கொட்டப்பட்டுள்ளது.

மேலும், இதுடன் குப்பைகளும் அதிக அளவு இருப்பதால் பழுதான வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதன பெட்டியில் இடையில் மழை நீர் சேர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மேலும் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் ஈக்களும் உணவு பண்டங்களில் வந்து உட்காருவதால் நோய் தொற்று ஏற்பட்டு வாந்தி பேதி மற்றும் தொடர் உடல் உபாதைக்கு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உடனடியாக சாலையில் இருபுறமும் குவிக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்றி மேலும் அந்த குப்பைகளையும் அகற்றி பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும், தினசரி குப்பைகளை அள்ளி பகுதி சுத்தமாக வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முதல் நோய் தொற்றில் இருந்து காக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.